ADDED : ஜூலை 18, 2025 11:56 PM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி குடிநீர் ஊருணி, மாசடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நெடுஞ் சாலைத்துறை சார்பில் குடிநீர் ஊருணியை பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி ஊராட்சியில் பாரம்பரிய குடிநீர் ஊரணி உள்ளது. மேலுார் காரைக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிக்காக, பாதரக்குடியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியின் போது குடிநீர் குளம் முற்றிலும் மாசு அடைந்தது. கிராம மக்கள் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
ஊருணியை பராமரித்து தருவதாக உறுதியளித்த நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் அளித்தனர்.
இது குறித்த தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நான்கு வழி சாலை திட்ட பொறியாளர் ராஜா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, குடிநீர் ஊருணியை பராமரிக்கும் பணிக்காக, தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

