/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ரூ.56 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
/
காரைக்குடியில் ரூ.56 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
காரைக்குடியில் ரூ.56 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
காரைக்குடியில் ரூ.56 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ADDED : பிப் 05, 2025 10:04 PM

காரைக்குடி; காரைக்குடி மாநகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.56 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை திட்டப் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி 36 வார்டுகளுடன் நகராட்சியாக செயல்பட்டு வந்தது. தற்போது, கோட்டையூர் மற்றும் கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், தளக்காவூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
அனைத்து பகுதிக்கும் குடிநீர் வழங்கிடும் வகையில், அம்ருத் 2.0 திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 2025- 26 வரை செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வசதி வழங்கப்படுகிறது.
காரைக்குடியில் இந்த திட்டத்திற்கான பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக மாநகராட்சியில் உள்ள 7 வார்டுகளில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குவதற்கான இணைப்பு நடந்து வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டமும் ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.