/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலடிமடை கிராமத்தில் குடிநீர் தொட்டி உடைப்பு
/
வேலடிமடை கிராமத்தில் குடிநீர் தொட்டி உடைப்பு
ADDED : ஜன 09, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் ஊராட்சிக்குட்பட்ட வேலடிமடை கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடக்குத் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் மின்சாதன பொருட்களை சிலர் உடைத்து சென்றனர். அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும்,இளையான்குடி போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர்.

