/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விற்பனைக்கு வந்த தர்பூசணி பழங்கள்
/
விற்பனைக்கு வந்த தர்பூசணி பழங்கள்
ADDED : பிப் 23, 2024 05:07 AM

மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் வெயில் துவங்கியதை அடுத்து மக்களின் தாகத்தை தீர்க்கும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வெயில் துவங்கியதை அடுத்து மக்கள் மதிய நேரங்களில் குளிர்பானங்களையும்,இளநீர் மற்றும் பழச்சாறுகளையும் அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.இந்நிலையில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தர்பூசணி பழ விற்பனையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
கமுதி வியாபாரி குமார் கூறுகையில்,கமுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்களை மானாமதுரைக்கு விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம்.தற்போது ஒரு கிலோ ரூ. 20 க்கு விற்பனை செய்து வருகிறோம். மக்கள் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் பழங்களை வாங்கி செல்கின்றனர் என்றார்.