தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா


ADDED : பிப் 19, 2024 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி, : காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலை பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இப்பள்ளி உட்பட 12 பள்ளிகளுக்கு நவீன உபகரணம், கம்ப்யூட்டர், சூரிய மின் உற்பத்தி நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் இயந்திரம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 40 கிராமங்களுக்கு 1,500 சோலார் மின்விளக்கு, 30 பள்ளிகளுக்கு நவீன உபகரணம் என ரூ.4 கோடிக்கான நலத்திட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு சேலார் வில்லேஜ் டிரஸ்ட் தலைவர் என்.நாச்சியப்பன் வரவேற்றார். பள்ளி தாளாளர் மெய்யப்பன் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கண்டரமாணிக்கம் சோலார் வில்லேஜ் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு நவீன உபகரணங்கள், கணினி ஆய்வகத்திற்கு 14 கம்ப்யூட்டர், சூரிய மின் உற்பத்தி நிலையம், டச் ஸ்கிரீன் டிவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் 12 பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிர்வாக குழு செயலர் பெரியணன் நன்றி கூறினார். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் ராமசாமி ஏற்பாட்டை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us