ADDED : அக் 02, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை எம்.எல்.ஏ., தமிழரசி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கினார்.
நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி,துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள், தாசில்தார் கிருஷ்ணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டனர்.