ADDED : நவ 15, 2025 05:31 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரையில் நலம் காக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9:00 மணி முதல் சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில் மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு, மகப்பேறு, குழந்தை, இதயம், நரம்பியல் பல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளதால் பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
