ADDED : ஜன 14, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
பூவந்தி: பூவந்தியில் நலம் காக்கும் மருத்துவ முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., தமிழரசி முகாமினை தொடங்கி வைத்தார். பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுகுணா வரவேற்றார்.
முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, பஸ் பாஸ், சான்று, உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
