ADDED : டிச 09, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வன உயிரின புகைப்பட தேர்வு போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட வன அலுவலர் பிரபா துவக்கி வைத்தார்.
துணை வன பாதுகாவலர் மலர்கண்டன், கார்த்திகேயன், பேராசிரியர் விஜய ஆனந்த், தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புகைப்பட போட்டியில் முதலிடம் ராஜபாளையம் விகாஷ், இரண்டாமிடம் சிவகங்கை ராஜேஷ், மூன்றாம் இடத்தை திருநெல்வேலியை சேர்ந்த சங்கர் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் பரிசு, சான்றுகளை வழங்கினார்.
வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.