நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர்கலை கல்லுாரியில் வன உயிரின வார விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். வனவர் பாண்டியராஜன் வரவேற்றார். வன அலுவலர் குணசேகரன் பேசினார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு, ஓவியம், கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் பூங்கொடி போட்டிக்கான நடுவர்களாக இருந்தார். வன அலுவலர் பார்த்திபன் ஏற்பாடுகளை செய்தார். வனக்காப்பாளர் பெத்தபெருமாள் நன்றி கூறினார்.