ADDED : மார் 21, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் போடப்பட்ட மெட்டல் ரோடுகள் சிதிலமடைந்ததால் தார்ச்சாலையாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட மண் ரோடுகள் மெட்டல் ரோடுகளாக மாற்றப்பட்டன.
இந்த ரோடுகளில் மண் அரிக்கப்பட்டு பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
இச்சாலைகளை தார் சாலையாக மாற்ற மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பல இடங்களில் சாலை கவனிப்பாரற்றே உள்ளது. எனவே மெட்டல் சாலைகளை விரைந்து தார்சாலையாக மாற்ற வேண்டும்.