/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா
/
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வினாத்தாள் செலவினம் வழங்கப்படுமா
ADDED : ஏப் 10, 2025 05:55 AM
காரைக்குடி: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 6 முதல் 8ம் வகுப்பு வரையில் வினாத்தாள் செலவினங்களை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதி தேர்வு ஏப். 8ம் தேதி தொடங்கி ஏப். 24 வரை நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வுக்கு வினாத்தாள் செலவினங்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு சங்கங்களின் கோரிக்கையால் 6 முதல் 8ம் வரையிலும், வினாத்தாள் செலவினங்கள் அரசு பள்ளிக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் மட்டுமே செலவினத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாணவர்களிடம் வினாத்தாளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நிலை உள்ளது. பாரபட்சமின்றி அரசு பள்ளிகள் போல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வினாத்தாள் செலவினத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.