/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படுமா?
/
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படுமா?
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படுமா?
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படுமா?
ADDED : ஜூன் 25, 2024 11:19 PM
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 3.66 லட்சம் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில், பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மே மாதத்திற்கென 331 டன் துவரம் பருப்பு, 3 லட்சத்து 37 ஆயிரத்து 267 பாக்கெட் பாமாயில், அம்மாத துவக்கத்திலேயே ரேஷன் கடைகளுக்கு வழங்கி, கார்டு தாரர்களுக்கு விற்பனை செய்திருக்க வேண்டும்.
ஆனால், எம்.பி., தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அரசு டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அதற்கான சிக்கல் தீர்ந்து சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான மே மாத ஒதுக்கீடான 331 டன் பருப்பு, 3,37,267 பாக்கெட் பாமாயில் முழுமையாக வழங்கிவிட்டனர். காலதாமதம் காரணமாக ஜூன் இறுதி வரை மே மற்றும் ஜூன் மாத ஒதுக்கீடான துவரம் பருப்பு, பாமாயிலை கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதே போன்று ஜூன் மாதத்திற்கு 320 டன் துவரம் பருப்பு, 3,39,666 பாக்கெட் பாமாயில் ஒதுக்கப்பட வேண்டும். ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டில் 38 சதவீத பொருட்களை ரேஷன் கடைகளுக்கு வழங்கி விட்டனர்.
படிப்படியாக நுகர்பொருள் வாணிப கழக கோடவுன் மூலம் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு போதிய துவரம் பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்த பின்னரும், அதை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லும் கார்டுதாரர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்கள் துவரம் பருப்பு, பாமாயில் இல்லை. இன்று போய் நாளை வாருங்கள் என திருப்பி விடுகிறார்களாம்.
பெரும்பாலான ரேஷன் கடைகள் மதியத்திற்கு மேல் பூட்டிக் கிடப்பதால், மே, ஜூன் மாத ஒதுக்கீடான துவரம் பருப்பு, பாமாயிலை வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் ஏமாற்றம் அடைவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளில் கண்டிப்பாக கார்டுதாரர்களுக்கு மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை முழுமையாக வழங்க கலெக்டர் ஆஷா அஜித் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.