/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வளர்ச்சித்திட்டம் இல்லாமல் எஸ்.புதுார் ஒன்றியம் பின்னடைவு! சாகுபடி பரப்பும் குறைவதால் விவசாயத்திலும்
/
வளர்ச்சித்திட்டம் இல்லாமல் எஸ்.புதுார் ஒன்றியம் பின்னடைவு! சாகுபடி பரப்பும் குறைவதால் விவசாயத்திலும்
வளர்ச்சித்திட்டம் இல்லாமல் எஸ்.புதுார் ஒன்றியம் பின்னடைவு! சாகுபடி பரப்பும் குறைவதால் விவசாயத்திலும்
வளர்ச்சித்திட்டம் இல்லாமல் எஸ்.புதுார் ஒன்றியம் பின்னடைவு! சாகுபடி பரப்பும் குறைவதால் விவசாயத்திலும்
ADDED : நவ 08, 2025 01:29 AM
மாவட்டத்தின் முக்கிய விவசாய பகுதியான இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 47 ஆயிரம் பேர் உள்ளனர்.
மலை, மலை சார்ந்த தொடர்கள் என நான்கு மாவட்ட எல்லைகளை கொண்ட இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மட்டுமே. ஒன்றியம் உருவாக்கப்பட்டு 35 ஆண்டு கடந்தும் இங்கு எந்த முன்னேற்றமும் இல்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகளுக்கு மக்கள் போர்க்கொடி துாக்க வேண்டி உள்ளது.
கல்வி, மருத்துவம், தொழில் வாய்ப்புகளில் இப்பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. கிராமங்களுக்கு இடையே பள்ளி வேலை நேரங்களில் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் பத்தாம் வகுப்புகளை தாண்டுவதே அரிதாக உள்ளது.
கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இப்பகுதியில் கல்லூரிகள் ஏதும் இல்லாததால், பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று திரும்ப இரவு நேரம் ஆகி விடுவதால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்புவதே இல்லை.
இங்குள்ள இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி மற்றும் அத்தியாவசிய சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகின்றது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு பக்கத்து மாவட்ட மருத்துவமனைகளையே இம்மக்கள் நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
பருவ மழை பொய்க்கும் காலங்களில் இப்பகுதி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் அவலம் உள்ளது. சில நேரங்களில் மிளகாய் உள்ளிட்டவை அதிகமாக விளைந்து விலை குறைவதாலும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
வேளாண்மை சார்ந்த தொழிற்கூடம் இப்பகுதியில் அமைத்தால் முன்னேற்றம் கிடைக்கும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை.
சில வருடங்களாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை வாங்கி பண்ணை நிலங்களாக மாற்றி, அருகிலுள்ள மேய்ச்சல் நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால் மலைகளில் இருந்து ஓடிவரும் தண்ணீர் வரத்து தடைபட்டு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் விவசாயம் பொய்த்து தொழில், வேலை வாய்ப்புக்காக இப்பகுதி மக்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் பின்தங்கியுள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

