ADDED : ஏப் 30, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி அம்மன் சன்னதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சத்யகுமார் 40. இவரது கடையில்  ஏப். 28ம் தேதி, கடையில் நகைகளை சரிபார்த்த போது அதில், இரண்டரை பவுன் தங்க செயின் ஒன்று காணாமல் போனது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, கடையில் விற்பனையாளராக வேலை செய்த மகேஸ்வரி 28 நகையை திருடியது தெரிய வந்தது.
காரைக்குடி போலீசில்  புகார் அளித்ததன் பேரில் மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

