/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணிடம் ரூ.1.95 லட்சம் மோசடி
/
பெண்ணிடம் ரூ.1.95 லட்சம் மோசடி
ADDED : ஜன 01, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் திருவேலங்குடியைச் சேர்ந்த 21 வயது பெண் டிகிரி முடித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்து விளம்பரம் பார்த்து அதில் இருந்த 'ஐடி'யில் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவர் அவரின் மேல் படிப்புக்கு கல்வி உதவி தொகை வாங்கித் தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
அந்த பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றவர் உதவித்தொகை பெற்றுத்தரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மேல்விசாரணை நடக்கிறது.

