/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ரூ.6.19 லட்சம் மோசடி
/
வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ரூ.6.19 லட்சம் மோசடி
வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ரூ.6.19 லட்சம் மோசடி
வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ரூ.6.19 லட்சம் மோசடி
ADDED : நவ 26, 2025 12:59 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 52. இவரது அலைபேசிக்கு அக்.1 அன்று ஒருவர் பேசியுள்ளார். அவர் தன்னை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் பேசியதை நம்பிய ராஜேஸ்வரி அவரிடம் தனக்கு வந்த ஒ.டி.பி., எண்ணை கூறியுள்ளார். அன்றே ராஜேஸ்வரி வங்கி கணக்கில் இருந்து 6 தவணைகளில் ரூ.6 லட்சத்து 19 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இழந்த பணத்தை மீட்டு தருமாறு ராஜேஸ்வரி சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இளைஞரிடம் ரூ.6.89 லட்சம் மோசடி தேவகோட்டையை சேர்ந்தவர் தீன்சா 38. இவரது டெலிகிராம் ஐ.டி.,க்கு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தீன்சா அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 89 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பணத்திற்கான லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். தீன்சா புகாரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

