/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமணமான 5 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை
/
திருமணமான 5 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 05, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே அரசகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சத்தியா 25. இவர்களுக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
நேற்று மதியம் 2:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது சத்தியா துாக்கிட்டு இறந்துள்ளார். வெளியில் சென்ற மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையின் கதவு பூட்டியிருந்துள்ளது.
கதவை தள்ளி பார்த்தபோது சத்தியா துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். மணிகண்டன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சத்தியா உடலை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.