ADDED : ஆக 26, 2025 03:51 AM
காரைக்குடி: காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சக்திவேல் 34. இவரது 2வது மனைவி இலக்கியா.
இவர் கடந்த 8 வருடங் களுக்கு முன்பு சக்திவேலை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர் களது விவாகரத்து சம்பந்த மாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கணவர் சக்திவேல் காரைக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவரை 3வது திருமணம் செய்ததாக இலக்கியா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். அங்கு சக்திவேலும் தானும் தற்போது தொடர்பில் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சக்திவேல் காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அந்த பெண் எழுதிய கடிதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.