/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண், முதியவருக்கு வெட்டு ஸ்டேஷன் முற்றுகை
/
பெண், முதியவருக்கு வெட்டு ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜூலை 27, 2025 12:16 AM
காரைக்குடி: அமராவதிப்புதுார் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா 70. காய்கறி வியாபாரம் செய்கிறார். இவரது பேத்தி பாண்டிச்செல்வி 32, பேரன் மாரிமுத்து 29 கருப்பையா வீட்டில் வசிக்கின்றனர். மாரிமுத்துவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் 25, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்தி,அவரது நண்பர் விக்கி,மாரிமுத்துவை தாக்க அவரது வீட்டிற்கு வந்தனர்.
இருவரும் வருவதை பார்த்த மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் கதவை அடைக்க முயன்றனர்.
கதவை திறக்க முற்பட்ட போது, பாண்டிச்செல்விக்கு கை, கழுத்தில் வெட்டு விழுந்தது.
கருப்பையா மாரிமுத்து இருவரையும் வெட்டினர். அருகில் இருந்தவர்கள் வந்ததால், கார்த்தி மற்றும் அவரது நண்பர் தப்பினர். காயமடைந்த மூவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பிரச்னை செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.