நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே காரைக்குளம் சத்தியமூர்த்தி மனைவி ராதிகா. இவர் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பூக்கடை நடத்துகிறார்.
காரைக்குளத்தில் இருந்து டூவீலரில் தாயமங்கலம் நோக்கி வந்தார். சானாரேந்தல் விலக்கு அருகே எதிரே வந்த லாரி மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.