/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா
/
அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா
அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா
அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு என பெண் தர்ணா
ADDED : டிச 10, 2025 06:50 AM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு வேண்டுமென்றே தாமதமாக அழைப்பு கடிதம் அனுப்பி முறைகேடு நடப்பதாக கூறி பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
எஸ்.புதுார் ஒன்றியம் திருமலைக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மணிமேகலை. இவர் சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். வேறு ஒருவருக்கு அப்பணியை வழங்கும் நோக்கத்துடன், வேண்டுமென்றே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை தனக்கு தாமதமாக அனுப்பியதாக கூறி நேற்று ஒன்றிய அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாரியிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
பி.டி.ஓ., காதர்முகைதீனிடம் கேட்டபோது, தபால் தாமதமாக சென்றதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இப்பணிக்கு 27 விண்ணப்பங்கள் வந்திருந்தது. அதில் தகுதியுள்ள 10 பேருக்கு ஒன்றாம் தேதி அழைப்பு கடிதம் அனுப்பி இருந்தோம். ஐந்து பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்து சென்றுள்ளனர். இப்பெண் குறிப்பிட்ட தேதியில் வரவில்லை,' என்றார்.

