/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு
/
பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு
பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு
பெண் எஸ்.எஸ்.,ஐ., யிடம் பஸ்சில் நகை, பணம் திருட்டு
ADDED : நவ 26, 2025 03:47 AM
மானாமதுரை: திருப்புவனம் புதுார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவல்லி 46, இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.எஸ்.,ஐ., ஆக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மானாமதுரையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்காக திருப்புவனத்தில் இருந்து பஸ்சில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள திருமண மஹாலுக்கு செல்வதற்காக மற்றொரு டவுன் பஸ்சில் சென்றபோது தனது பையில் பர்சில் இருந்த 3 பவுன் நகை, ரூ.4 ஆயிரம், அலைபேசி ஆகியவை காணாமல் போனதை அறிந்து மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.