/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீடுகளில் ஊட்டி ரோஜா ஆர்வமுடன் வாங்கிய பெண்கள்
/
வீடுகளில் ஊட்டி ரோஜா ஆர்வமுடன் வாங்கிய பெண்கள்
ADDED : பிப் 23, 2024 05:14 AM

சிவகங்கை, : ஊட்டியில் மலரும் ரோஜாக்களை வீட்டில் மலர வைக்க சிவகங்கையில் விற்கப்படும் ரோஜா கன்றுகளை பெண்கள் வாங்கி சென்றனர்.
பெண்களுக்கு எவ்வளவு பூக்கள் விற்பனைக்கு வந்தாலும், ஊட்டி ரோஜா மற்றும் பட்டன் ரோஜாக்களை கண்டாலே அலாதி பிரியம். ரோஜாக்கள் மீதுள்ள ஆர்வத்தால், வீடுகளில் அதிகளவில் ரோஜா கன்றுகளை வளர்க்க துவங்கி விட்டனர்.
சிவகங்கை சந்தையில் விற்பனைக்கு வந்த ஊட்டி, பட்டன் ரோஜா கன்றுகள் மட்டுமின்றி வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் குபேர செடி, குரோட்டன்ஸ், மணி பிளான்ட், டேபிள் ரோஸ், வெற்றிலை கொடி, வீட்டு வரவேற்பு அலங்கரிக்கும் அழகு செடிகளை வாங்கி சென்றனர்.
ஊட்டி ரோஜா கன்று ஒன்று ரூ.50 முதல் 100 வரை விற்கப்படுகின்றன. துளசி, வெற்றிலை, மணி பிளான்ட் உள்ளிட்டவை ரூ.30 ல் இருந்து 50 வரை விற்கப்படுகின்றன.