/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் பெண்கள் போராட்டம்
/
இளையான்குடியில் பெண்கள் போராட்டம்
ADDED : நவ 03, 2024 05:42 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு சமாதான கூட்டம் நடத்தி சாமி கும்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்.31ம் தேதி இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு பிரிவினர் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஐந்துக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு பிரிவினர் கொடுத்த புகாரில் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதை கண்டித்து நேற்று காலை அப்பிரிவினைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வேலடிமடை கிராமத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.