ADDED : ஜன 06, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி பாய் பூலேவின் பிறந்தநாள் விழா பெண் கல்வி நாளாக கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கேத்ரின் கன்னிகா தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் முனுசம்மாள் முன்னிலை வகித்தார். தென் மண்டல மகளிர் அணி செயலாளர் பியூலா கிறிஸ்டி தங்கம், லேடி டோக் கல்லூரி பேராசிரியர் கலைவாணி பேசினர். சாவித்திரிபாய் பூலேவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட மகளிர் பிரிவு முன்னாள் செயலாளர் நதியா நன்றி கூறினார்.

