ADDED : ஜன 28, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மேலப்பசலை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மான்கள், பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையை கடந்து செல்லும்போது வாகனங்களால் அடிபட்டு பலியாகி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற செவட்டை என்றழைக்கப்படும் மர நாய் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.

