/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்
/
கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்
கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்
கால்வாயில் இடிந்து விழுந்த வீடு சோகத்தில் இறந்த பணியாளர்
ADDED : ஜன 01, 2025 07:39 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் கால்வாயில் வீடு இடிந்து விழுந்ததில் இருந்து சோகத்தில் இருந்த துாய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பலரும் பிரமனுார் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இருபதிற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். இதில் பேரூராட்சியில் துாய்மை பணியாளராக பணிபுரியும் மாரியப்பன் 58, என்பவரும் ஒருவர். தனது இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த மாரியப்பனின் வீடு கடந்த 7ம் தேதி பிரமனுார் கால்வாயில் தண்ணீர் திறப்பின் போது தடுப்புச்சுவர் சேதமடைந்ததால் இடிந்து விழுந்தது.
ஆய்வு செய்த வருவாய்த்துறை, பேரூராட்சியினர் வீடுகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் தனியார் திருமண மகாலில் இருபது குடும்பத்தையும் தங்க வைத்திருந்தனர்.
மகால் உரிமையாளர் வெளியேற்றியதை அடுத்து பேரூராட்சிக்கு என கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த புதிய கட்டடத்தில் துாய்மை பணியாளர்கள் மூன்று குடும்பங்களை தற்காலிகமாக தங்க வைத்திருந்தனர். சொந்தவீடு இடிந்து விழுந்த சோகத்தில் மாரியப்பன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அரசு கட்டடத்தில் இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலையில் மாரியப்பன் வீடு இடிந்து இடத்தின் முன் ரோட்டில் வைத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை இறுதி சடங்கு செய்தனர்.

