/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதகுபட்டி விபத்தில் தொழிலாளி பலி
/
மதகுபட்டி விபத்தில் தொழிலாளி பலி
ADDED : ஜூலை 24, 2025 06:47 AM
சிவகங்கை: சிவகங்கை மஜித்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் 55. கோட்டை ராஜா.
இவர்கள் அகிலாண்டபுரம் அன்புக்கண்ணன் 39 என்பவரது கல்லுப்பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று கல்லுப்பட்டறையில் கற்களை ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு சரக்கு வாகனத்தில் வந்தனர். வாகனத்தை அன்புக்கண்ணன் ஓட்டினார். வண்டியின் பின்னால் கல்லின் மீது முருகன், கோட்டை ராஜா அமர்ந்திருந்தனர்.
சரக்கு வாகனம் ஒக்கூர் அருகே வரும்போது கட்டுபாட்டை இழந்து ரோட்டின் இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் முருகன் பலியானார். மதகுபட்டி போலீசார் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.