ADDED : மே 07, 2025 02:17 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியில் கல் அறுக்கும் இயந்திரத்திலிருந்து உடைந்த பிளேடு தாக்கியதில் வடமாநில தொழிலாளி இறந்தார்.
திருப்புத்துார் வழியாக மேலுார் -காரைக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வருகிறது. அதில் காட்டாம்பூர் அருகே சர்வீஸ் ரோடு பணியில் ரோட்டோரத்தில் கல் அடுக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கு பணியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தெளபால் மகன் சுகல்ராம்49, மீது கல் அறுக்கும் இயந்திரத்தின் அறுக்கும் பிளேடு உடைந்து பாய்ந்ததில் அவரது வயிற்றில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருக்கோஷ்டியூர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
