நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடியைச் சேர்ந்தவர் குருசாமி 45, திருமணமாகி 11வயது, மூன்று வயது, ஆறு மாத பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டடங்களுக்கு பால்சீலிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தவர் போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் போதையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். நேற்று மதியம் வீட்டு வாசலில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.