ADDED : பிப் 11, 2026 06:50 AM

திருப்புவனம்: வட மாநிலங்களை போல குளிரை தவிர்க்க திருப்புவனத்தில் கூலி தொழிலாளர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
தமிழகத்தில் மார்கழி, தை, மாசி மாதங்களில் பனிப் பொழிவு இருக்கும்.
இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தமிழகம் முழுவதும் பனிப்பொழிவு 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.
திருப்புவனத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகம், காலை 5:00 மணிக்கே மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.
பனிப்பொழிவு காரணமாக 5:00 மணிக்கு கிளம்ப முடியாமல் குளிர் காரணமாக தவித்து வருகின்றனர். குளிரை தவிர்க்க நேற்று கூலி தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
நேற்று வெயில் வந்தும் பனி விலகவே இல்லை. 8:00 மணி வரை நீடித்த பனிப் பொழிவால் முதியோர்கள், சிறுவர், சிறுமியர்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டனர்.
