தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்லூரியில் பயிற்சி பட்டறை

கல்லூரியில் பயிற்சி பட்டறை

கல்லூரியில் பயிற்சி பட்டறை


UPDATED : ஆக 20, 2026 06:26 PM

ADDED : ஆக 20, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 06:26 PM ADDED : ஆக 20, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்:திருமயம் அருகே லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமிக்ஞைகள் மற்றும் அமைப்புகள குறித்த கருத்தரங்கு நடந்தது.

மின்னணுவியல், தொடர்பியல் பொறியியல் துறை மற்றும் மேத்வொர்க்ஸ் நிறுவனத்தினர் இணைந்து ‛அடுத்த தலைமுறை தொழில்துறை பயன்பாடுகளுக்கான மாற்றுத் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தொழில்துறை சார்ந்த கருத்தரங்கு நடந்தது. டீன் சீனிவாசன் வரவேற்றார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் துவக்கி வைத்தார். பேராசிரியர் விவியன் ரேச்சல் ஜெய்சன் சிறப்பு வகித்தார். முதல்வர் பாலமுருகன், ராபின்சன் வாழ்த்துரை வழங்கினர்.சென்னை ஏ.ஆர்.கே., இன்போசொல்யூசன் நிறுவன தொழில்நுட்ப தலைவர் கார்த்திகேயன் பயிற்சி அளித்தார். தொழில்நுட்ப திறன், நடைமுறை அறிவு, மென்பொருள் பயன்பாட்டுத் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் தயார்நிலையை மேம்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தனர்.

////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us