நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பூமி தினவிழா நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர் வாசுகி வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி உலக பூமி தினம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். ஆசிரியர் கமலம்பாய் நன்றி கூறினார்.

