நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, - காரைக்குடி அழகப்பா பல்கலை., தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
துணைவேந்தர் க.ரவிதலைமை வகித்தார். தமிழ் ஆய்வு துறை தலைவர் கண்ணதாசன் பேசினார். தமிழ் பண்பாட்டு மைய இயக்குனர் செந்தமிழ்பாவை வரவேற்றார்.
காரைக்குடி அருகே உள்ள அன்னை தெரசா கல்வியியல் கல்லுாரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் செல்லத்துரை தலைமையேற்றார்.பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் பேசினார். நிகழ்ச்சியில் பாரதியார் படம் திறந்து வைக்கப்பட்டது. பேராசிரியர் கவிதா ராஜலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.