/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் உலக ஆசிரியர் தின விழா
/
சிவகங்கையில் உலக ஆசிரியர் தின விழா
ADDED : டிச 24, 2024 04:39 AM
சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை கிளை சார்பாக உலக ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினர்.
கிளை தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் காளிராசா முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் பேசினார். பகிரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன் ஆசிரியர்களுக்கு விருது வழங்கினர்.
சிவகங்கை நகராட்சி கோட்டை மூலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி, கூட்டுறவுபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாவித்திரி, துாய ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழந்தை ஆரோக்கியமேரி, விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன், பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ராஜா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரபு, துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், துளிர் திறனறிவு தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தமிழ்ச்செல்வம் பேசினர். பொருளாளர் ராஜசரவணன் நன்றி கூறினார்.