ADDED : ஜூலை 08, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் முனியாண்டிபுரத்தில் வரும் குடிநீரில் புழு பூச்சி வருவதால் கிராம மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை.
கட்டிக்குளம் ஊராட்சிக்குட்பட்ட முனியாண்டிபுரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில்இவர்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல் போடப்பட்டு தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
தொட்டியை பல மாதங்களாக சுத்தம் செய்யாததால் வீடுகளுக்கு வரும் குடிநீரில் புழு, பூச்சி வருவதாக கிராம மக்கள் குற்றும் சாட்டி வருகின்றனர். வண்டிகளில் வரும் குடிநீரை ரூபாய் 15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் கட்டிக்குளம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.