ADDED : அக் 12, 2025 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை மானாமதுரை, இளையான்குடி பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் மானாமதுரை வீர அழகர் கோயிலில் அதிகாலை உற்ஸவர் சுந்தரராஜ பெருமாளுக்கும், வீர ஆஞ்சநேயருக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு வடை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டன.
தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும், வேம்பத்துாரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இளையான்குடி மதன வேணுகோபால பெருமாள் கோயிலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.