நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் முத்திருளாண்டி சுவாமி எனப்படும் மிளகாய் சாந்து சித்தர் ஜீவசமாதி உள்ளது.
இங்கு சுவாமிக்கு மிளகாயை அரைத்து அபிஷேகம் செய்தால் நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து அபிஷேகம் செய்கின்றனர்.
கார்த்திகையில் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு 11 வகை பொருட்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
விழாவில் தெக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.