நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆதிசங்கரர் கோயிலில் சத்குரு ஸ்ரீ தியாகபிரும்ம ஆராதனை விழா நடந்தது.
ஆராதனை விழாவை முன்னிட்டு ராமபிரான், தியாகராஜர் படங்கள் ஊர்வலமாக சென்றது. விழாவிற்கு வழக்கறிஞர் சங்கர் தலைமை வகித்தார்.
ஆராதனை டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். துணை செயலாளர் ராமசாமி அறிக்கை வாசித்தார். இலக்கிய சீனிவாசன் அறிமுக உரை ஆற்றினார். சென்னை தணிக்கையாளர் முத்துக்கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கல்லூரி தலைவர் லட்சுமணன், டாக்டர் ராம் மோகன் ராவ், செயலாளர் ராமசாமி துரை சிறப்பு வகித்தனர். விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது.

