/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட கோயில், சர்ச்களில் வழிபாடு
/
சிவகங்கை மாவட்ட கோயில், சர்ச்களில் வழிபாடு
ADDED : ஜன 02, 2025 05:10 AM

சிவகங்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 11:45 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம், சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
நேற்று அதிகாலை 1:00 மணி வரை திருப்பலி நடந்தது.அலங்கார அன்னை சர்ச் பாதிரியார் ஜேசுராஜா முன்னிலை வகித்தார். பிஷப் அலுவலக செயலாளர் ஆனந்த் பிரசாத், பொறுப்பாளர் ஜான் பிரிட்டோ உட்பட பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு புனித அலங்கார அன்னை சர்ச் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
மானாமதுரை, இளையான்குடி கோயில், சர்ச்களில் புத்தாண்டை முன் னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், வீர அழகர் கோயில், தியாக வினோத பெருமாள் கோயில் அப்பன் பெருமாள் கோயில்,வழிவிடு முருகன் கோயில்உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வர ஞானாம்பிகை அம்மன் கோயில் சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
* இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில்புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு திருத்தல அருட் பணியாளர்இமானுவேல் தாசன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதிகாலை 12:00 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச்சில் புத்தாண்டை முன்னிட்டு பங்குத்தந்தை சார்லஸ் கென்னடி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
* திருப்புத்துார் ஆர்.சி. பாத்திமா நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள புனித அமல அன்னை சர்ச்சில் ஆங்கிலப் புத்தாண்டு விழா நடந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பலி நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுச் செயலர் எட்வர்ட் அடிகளார்,திருப்புத்துார் பங்குத்தந்தை அற்புத அரசு அடிகளார் இணைந்து புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர்.
திருப்புத்துார் டி.இ.எல்.சி. ஆரோக்கிய நாதர் சர்ச், புதுக்கோட்டை ரோடு ஏ.ஜி.சர்ச்சிலும் நடந்த பிரார்த்தனைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* காரைக்குடி சர்ச்களில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
செக்காலை துாய சகாய மாதா ஆலயத்தில்நள்ளிரவு திருப்பலி நடந்தது. உதவி பங்குத்தந்தை டேனியல் திலீபன் நடத்தினார். இரவு பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் உதவி பங்கு தந்தை புத்தாண்டு திருப்பலியை நிறைவேற்றினார்.
செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயம், அரியக்குடி வளன் நகர் குழந்தை இயேசு ஆலயம், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலயம், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

