ADDED : அக் 27, 2024 04:52 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் 9வது தென் மண்டல அளவிலானயோகா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
ஏகாத்மா யோக வித்ய வித்யாலயா அசோசியேஷன், இந்தியன் அசோசியேசன் ஆப் யோகா டில்லி, ஓம் ஸ்ரீ சத்தீஷ் குருதேவ் பவுண்டேஷன் மற்றும் திருப்புத்துார் யோகா கேப்பிட்டல் சார்பில் போட்டி நடந்தது.
சிவகங்கை மாவட்ட அமைப்பு செயலாளர் ஷாஜஹான், நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன்,விருதுநகர் மாவட்ட உறுப்பினர் குருநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் வாழ்த்தினர்.
சிறப்பாக யோகா செயல்விளக்கம் அளித்தவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. முதல் பரிசை ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை ஏரியூர் காந்தி மெட்ரிக் பள்ளியும், மூன்றாம் பரிசை பிள்ளையார்பட்டி அச்சுதானந்தா மழலையர் தொடக்கப் பள்ளியும், பெற்றது. கனகராஜ் நன்றி கூறினார்.