நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் யோகா பயிற்சி ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. பயிற்சி மைய தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் கண்ணப்பன், பொறியாளர் சுந்தரமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
மதுரை மண்டல பேராசிரியர் உமாராணி, திட்ட அலுவலர் சுருளிகுமரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க கவுரவ மாவட்ட தலைவர் சாஸ்தா சுந்தரம், நல்லாசிரியர் மணவாளன், பேராசிரியர்கள் தினகரன், மகேஸ்வரன், ராமநாதன், வெற்றிவேந்தன், சீனிவாசன், பாண்டிராணி, ராஜேஸ்வரி பங்கேற்றனர். வினோத் ராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற 97 மாணவர்களுக்கு சான்று, நினைவு பரிசு வழங்கினர். பொருளாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.

