/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மு.சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
/
மு.சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
ADDED : ஜன 06, 2024 05:56 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி வெள்ளி அன்று இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று இங்கு வழக்கம் போல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. காலை 10:00 மணி முதல் கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டது.
காலை 11:00 மணிக்கு கிராமத்தினர் பாரம்பரிய முறைப்படி துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர். முதலில் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதைத் தொடர்ந்து தொழுவில் கட்டப்பட்டிருந்த மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டு பொட்டலில் கூடியிருந்த மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.
பெரும்பாலான மாடுகள் பிடிபடாமல் வெளியேறின. ஒரு சில மாடுகள் மட்டும் வீரர்களிடம் அடங்கிப் போயின.
மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர். 2 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.