ADDED : ஏப் 07, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை யாதவ சங்க அறக்கட்டளையை சேர்ந்த யாதவா மழலையர் தொடக்கப்பள்ளியில் இளம் தளிர் பட்டமளிப்பு விழா ஆண்டு விழா சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அனிதா அறிக்கை வாசித்தார். காரைக்குடி மகரிஷி வித்ய மந்திர் தாளாளர் சேதுராமன்,முன்னாள் துணை வேந்தர் மணிமேகலை குழந்தைகளுக்கு பட்டமளித்து பரிசு வழங்கினர்.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், மின் வாரிய கோட்ட முன்னாள் பொறியாளர் செல்லத்துரை, இளைஞர் அணி தலைவர் மனோ ள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

