ADDED : டிச 18, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு போலீஸ் எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் இடைய மேலுாரில் சோதனையிட்டனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் மதுரை மாவட்டம் காட்டுக்குளம் புதுார் மருதமுத்து மகன் ராஜா 26, மேலுார் அருகே தெற்கு ஆமுர் லிங்கம் மகன் சூர்யா 20 என தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த அரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.