/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புலியூர் பாலம் சீர்படுத்தகோரி இளைஞர்கள் சாலை மறியல்
/
புலியூர் பாலம் சீர்படுத்தகோரி இளைஞர்கள் சாலை மறியல்
புலியூர் பாலம் சீர்படுத்தகோரி இளைஞர்கள் சாலை மறியல்
புலியூர் பாலம் சீர்படுத்தகோரி இளைஞர்கள் சாலை மறியல்
ADDED : அக் 27, 2025 04:19 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே புலியூரில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரி கோட்டையூரில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளையான்குடி அருகே புலியூரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் மக்களுக்கென 40 ஆண்டிற்கு முன் பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால், சிதிலமடைந்து வருகிறது. இந்தபாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் பல முறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதை கண்டித்து நேற்று இளையான்குடி - சாலைக்கிராமம் ரோட்டில் கோட்டையூரில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரச பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டத்தை கை விட்டனர்.