
சிவகங்கை : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் 12:16 மணிக்கு நிழலே விழாத நிலையை பார்த்து மாணவர்கள் ரசித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி மாணவர்களிடம் விளக்கி கூறுகையில் வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும். ஏப். மாதத்தில் ஒரு நாளும், ஆக. மாதத்தில் ஒரு நாளும் என இரண்டு நாட்களில் மட்டும் நிழல் முழுமையாக மறையும். மற்ற நாட்களில் நிழல் இடது புறமாகவோ, வலது புறமாகவோ சிறிது நிழலாவது விழும் என்றார். தலைமையாசிரியர் தெய்வானை, ஆசிரியர்கள் கமலம்பாய், வாசுகி, வித்யா கலந்து கொண்டனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நிழல் இல்லாத நாளை பார்ப்பது குறித்து தலைமையாசிரியர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். ஆசிரியர் முத்துலட்சுமி,ஸ்ரீதர் உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.