/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசியில் தி.மு.க., வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது வேட்பாளர் ராணி பேச்சு

ADDED : மார் 25, 2024 06:44 AM
தென்காசி : ''தென்காசி தொகுதியில் தி.மு.க., வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது,'' என, அக்கட்சி வேட்பாளர் டாக்டர் ராணி பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இலஞ்சியில் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் ராணி பேசியதாவது:
அரசு டாக்டராக 14 ஆண்டுகள் பணிபுரிகிறேன். இத்தொகுதிக்கு என்னென்ன தேவை என்பதை நன்கு அறிவேன். வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்குள்ள குறைகளை களைவேன்.
ஐம்பதாண்டுகளாக தீர்க்கப்படாத செண்பகவல்லி அணை பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளே இல்லை. இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். குறைந்தபட்சமாக தொழிலாளர்கள்வேலை செய்யும் வகையில் தொழிற்சாலை அமைத்து கொடுக்கவும், கருப்பா நதி கால்வாய் அமைக்கவும், ஊத்துமலையை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
லோக்சபாவில் உங்கள் உரிமை குரலாக ஒலிக்க எனக்கு வாய்ப்பு அளியுங்கள். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்காசி தொகுதி என்ற பாராட்டை பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.