/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சங்கர நாராயண சுவாமி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
/
சங்கர நாராயண சுவாமி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
சங்கர நாராயண சுவாமி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
சங்கர நாராயண சுவாமி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
UPDATED : மார் 22, 2024 12:43 PM
ADDED : மார் 22, 2024 12:43 AM
சங்கரன்கோவில்:தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சியை, சூரிய பகவான் சிவலிங்கத்தை நேரடியாக பூஜிப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
இதனால் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் மூன்று நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, சிவலிங்கத்திற்கு சிறப்பு தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 21ம் தேதியான நேற்று, சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது.
இந்த அரிய காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். அப்போது சிவலிங்கத்திற்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சியால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

